கவிஞன் நான் கவிதைக்கு கரு தேடினேன்.
கிடைத்து விட்டது, பெண் சிசுவின் நுண் கரு...
சிசுவே! உனக்குத் தாய்ப்பால் நிச்சயம். ஆனால், தாய் நிச்சயம் இல்லை...
தன்னை கள்ளியாக்கி கள்ளியைத் தாயாக்கும் கபடதாரியை காணத்தான் போகிறாய்;
வளர்க்கும் திறன் இல்லையாம், வளர்ப்பின் வரன் இல்லையாம் - தந்தை சொல் மிக்கத் தந்திரம் இல்லை.
'பெற்றாய்', 'பார்த்தாய்', 'வளர்த்தாய்' எனும் தாய்களைச் சுமந்த தமிழ்த்தாயே - இக் கொடுந்தாயை ஏன் நீ கொடுத்தாய்?
வித்தாய், முத்தாய் காண வேண்டிய கருவை - "செத்தாய்" என முத்திரை பதித்தனரே! - நினது சொத்தாய் சுமந்து கொண்டாயோ பூமித்தாயே!
சிசுவே!!!
உனது வாழ்க்கைப் புத்தகத்தை திருப்பி வைத்து விட்டானோ இறைவன்?! -
முதலில் கிடைத்தது "கடைசி அத்தியாயம்"
No comments:
Post a Comment